×

மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பும் குளங்கள்

 

திருப்பூர், நவ.11: திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால்,கடும் வறட்சி ஏற்பட்டது. விவசாய சாகுபடி முற்றிலும் முடங்கியதோடு, தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களும் காய்ந்தன.

இந்தாண்டும் போதிய மழை பெய்யாத நிலையில், ஜூனில் துவங்கும்,தென் மேற்கு பருவ மழையும், முதல் இரண்டு மாதமாக விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றின. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணைகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. வறண்ட கிணறுகளில், நீர் வரத்து துவங்கி, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பும் குளங்கள் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்