- மார்க்சிஸ்ட்
- கம்யூனிஸ்ட்
- கட்சி
- பென்னாகரம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- தாடிகொம்பு
- திண்டுக்கல் மாவட்டம்
- மாவட்ட செயலாளர்
- சிசுபாலன்
- தின மலர்
பென்னாகரம், ஜூன் 25: திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் குணசேகரன் கண்டன உரையாற்றினார். மூத்த தலைவர் இளம்பரிதி, மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாதன், நாகராசன், மல்லிகா, சக்திவேல், வட்டார செயலாளர்கள் ஜீவானந்தம், சக்திவேல், தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி, சின்னசாமி, ஜெயா, சக்கரவர்த்தி, ராமச்சந்திரன், முருகன், கந்தசாமி, ராஜி, சக்கரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
