மானாமதுரை வட்டாரம் தெற்கு சந்தனூர் கிராமத்தில் நுண்ணீர் பாசன பராமரிப்பு பயிற்சி முகாம்

மானாமதுரை, செப். 16: மானாமதுரை வட்டாரம் தெற்கு சந்தனூர் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன பராமரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தலைமை தாங்கி நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம் திட்டங்களை எடுத்துக் கூறினார்.

மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர் சிவகங்கை நுண்ணீர் பாசன வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் நுண்ணீர் பாசனம் அமைக்கும் முறைகள் தேவைப்படும் ஆவணங்கள், மானியங்கள், வேளாண் திட்டங்கள், மானியங்கள், பிரதமமந்திரி கௌரவ ஊக்கத்தொகை திட்டம், இயற்கை வேளாண்மை ஆகியவை குறித்து விவசாயிகளிடம் விளக்கினர். பாசன நிறுவன பிரதிநிதி தவராஜன் நுண்ணீர் பாசனம் பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளிடம் விளக்கினார்.

துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துகள், பயன்படுத்தும் முறைகள், நன்மைகள் பற்றி விவசாயிகளிடம் கூறினார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சுமதி, அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர் சதீஷ், வினோத்குமார் செய்திருந்தனர். இந்த பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மானாமதுரை வட்டாரம் தெற்கு சந்தனூர் கிராமத்தில் நுண்ணீர் பாசன பராமரிப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: