×

மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சான்றுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 

திருப்பூர், அக்.27: தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாநகராட்சி செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மங்கை பாரதி பதிப்பகத்தின் கந்தசாமி தலைமை வகித்தார். தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகளில் உள்ள வடுகப்பட்டி வட்டெழுத்து கல்வெட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் சமண சமயம், சமண சிற்பம், பவுத்த பள்ளி கல்வெட்டு உட்பட பல்வேறு கல்வெட்டில் உள்ள சிறப்பு தொன்மை குறித்து விரிவாக பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி பேசினார். தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் எழுதிய புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மங்கை பாரதி பதிப்பகத்தின் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.

The post மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சான்றுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : School ,Tirupur ,Tirupur Corporation Chellappapuram Middle School ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்