தொண்டி, அக்.25: தொண்டியில் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சேதுபதி மன்னர் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் காரைக்குடி அழகப்பா கலை கல்லூரி மாணவர் அஹமது யாசின், பள்ளி கல்லூரி ஒன்றையர் பிரிவில் முதலிடமும், தொண்டி செய்யது முகம்மது அரசு பள்ளி மானவர் அல் அமின், 25 வயதுக்கு உட்பட்டோர் பள்ளி மூன்றாம் இடம் பெற்றார்.
அதே பிரிவில் இரட்டையர் பிரிவு மற்றும் பொதுப் பிரிவில் அஹமது யாசின் இரண்டாம் இடம், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் அமீன் மூன்றாம் பரிசு பெற்றார். 11 வயது இரட்டையர் பிரிவில் தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி மாணவன் யுவன் முதலிடம் பிடித்தார். இவர்களை பாராட்டிய நிகழ்வு தொண்டியில் நடைபெற்றது. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சாதிக் பாட்ஷா, ஆனந்த், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.