மாணவர்களுக்கு தடகள போட்டி

சேலம், செப்.9: சேலம் மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் வாழப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 66 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். 14, 17, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது. போல்வால்ட், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் இலக்கை நோக்கி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், சேலம் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று, அதில் விளையாட உள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

The post மாணவர்களுக்கு தடகள போட்டி appeared first on Dinakaran.

Related Stories: