மழை இருக்கு…சம்பா விளைஞ்சுரும் பஞ்சமாதேவி, கோயம்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

கரூர்: கரூர் மாவட்டம் கரூர் மற்றும் தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சமாதேவி, கோயம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கருர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சமாதேவி ஊராட்சியில் சங்கரனபாளையம் கிராமத்தில் சட்டமன்ற நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டிட பணி, இதே பகுதியில் சட்டமன்ற நிதி திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம், கருங்கல் காலணியில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கட்டிப் பணிகளை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கட்டுமான பணிகளுக்கான நிதி முறையாக வழங்கப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

The post மழை இருக்கு…சம்பா விளைஞ்சுரும் பஞ்சமாதேவி, கோயம்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: