மலை மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் உறைபனி கொட்டித்தீர்க்க வாய்ப்பு

ஊட்டி: நீலகிரியில் உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் மொத்தமாக கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளது. இதனால் கடும் அச்சத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை ஊட்டியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இதில், நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் நீலகிரியில் ஊட்டி, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பைக்காரா, சோலூர், கிளன்மார்கன், எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, தாய்சோலை போன்ற இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். மற்ற இடங்களில் சற்று குறைந்தே காணப்படும். இச்சமயங்களில் பகல் நேரங்களில் பனிக்காற்று வீசும். இதனால், வெயில் அடித்தாலும் கூட குளிர் வாட்டும். இந்த பனி பொழிவின் போது, கோரகுந்தா மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிளில் ‘0’ டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படும்.

 

The post மலை மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் உறைபனி கொட்டித்தீர்க்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: