மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா படத்திறப்பு

 

ஊட்டி, பிப்.2: மூத்த சுதந்திர போராட்ட வீரரும், முதுபெரும் இடதுசாரி தலைவருமான சங்கரய்யா சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் இந்திய சுதந்திர போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாக கழித்தவர் ஆவார். தலைசால் தமிழர் சங்கரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் ஊட்டி ஒய்டபுள்யுசிஏ ஆனந்த கிரியில் நடந்தது. சிபிஎம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் பங்கேற்று சங்கரய்யாவின் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் போஜராஜ், விசிக மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட குழு உறுப்பினர்களும் மற்றும் 300க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.

The post மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா படத்திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: