மன்னார்க்காடு புதிய சார்பு-கருவூலத்தை கேரள அமைச்சர் திறந்து வைத்தார்

 

பாலக்காடு, ஜூலை 26: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்க்காடு புதிய சார்பு-கருவூலத்தை கேரள நிதித்துறை அமைச்சர் பாலகோபால் குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் பாலகோபால் பேசியதாவது: கேரளாவில் அரசு கருவூலங்கள் சிறந்த முறைகளில் மக்களுக்காக செயலாற்றி வருகிறது. இதற்காக அதிகளவில் அதிகாரிகளும் முக்கிய பணியாற்றி வருகின்றனர்.

மாநில, மத்திய அரசுகளின் ரத்த நாடியாக கருவூலங்கள் திகழ்கிறது. கடந்த 2020-21 கால கட்டங்களில் வெள்ள சேதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு கருவூலம் மூலமாக நிதியுதவி அதிக அளவில் வழங்க முடிந்தது. கருவூலங்கள் மூலம் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு பென்ஷன் தொகை மாதம்தோறும் சரிவர வழங்க முடிகின்றன. மாநில அரசு சார்ந்த அனைத்து தரப்பு பண பட்டுவாடாக்கள் கருவூலங்களால் சிறந்தமுறையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக விழாவுக்கு எம்எல்ஏ ஷம்சுதீன் தலைமை தாங்கினார். எம்பி ஸ்ரீ கண்டன், வக்கீல்கள் பிரேம்குமார், சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். மன்னார்க்காடு நகராட்சி தலைவர் முகமது பஷீர், மன்னார்க்காடு பிளாக் பஞ்சாயத்து தலைவர் முகமது, அலநல்லூர், கோட்டோப்பாடம், தச்சநாட்டுக்கரை, குமரம்புத்தூர், தெங்கரை, காஞ்ஞிரப்புழா, தச்சம்பாறை, கரிம்பா, காராக்குறிச்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் பங்கேற்றனர்.

The post மன்னார்க்காடு புதிய சார்பு-கருவூலத்தை கேரள அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: