×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு

மன்னார்குடி: தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் சமூகநீதி நாளாக கடை பிடிக் கப் படும் என்றும், அப்பிறந்த நாள் அன்று அனைவரும் \”சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்க வேண்டும்\” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதையடுத்து ஒவ்வொருஆண் டும் செப்டம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னி ட்டு மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்து சமூக நீதிக்காக கடந்து வந்த பாதை ஏற்றதாழ்வு இல்லாத நிலை ஜாதி மத இனத்தால் பிரிவினை இல்லாத சமுதாய நிலை நோக்கிய பயணம் பெரியாரின் சமுதாய மாற்ற நிலை குறித்த கருத்துக்கள் குறித்து மாணவர் கள் மத்தியில் பேசினார். விலங்கியல் துறை தலைவர் ராமு, சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள் அலுவலக பணியாளர்கள் உறுதி மொழியினை ஏற்றனர். இந்நிகழ்ச்சியினை, நலப்பணித்திட்ட அலுவல ர்கள் பிரபாகரன், ஜென்னி, பேராசிரியர்கள் காமராசு, சிவக்குமார் மற்றும் சுப்ரமணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Social Justice Day ,Mannargudi Rajagopal Swamy Government College ,Mannargudi ,Periyar ,
× RELATED திண்டுக்கல்லில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு