மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.65லட்சம் நிதி உதவி முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

மன்னார்குடி: மன்னார்குடி அரசு உதவிபெறும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன்கருதி புதிதாக கணித ஆய்வகம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையுடன் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. தகவல் அறிந்து இப்பள்ளியில் 1988 முதல் 1995 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து. கணித ஆய்வகம் அமைத்திட நிதி உதவி செய்திட முடிவெடுத்தனர். முன்னாள் மாணவரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க பெடரேஷன் மாநில துணை தலைவருமான சரவணச்செல்வன், மாமலைவாசன், முத்துகுமரன், முத்து ஆகியோர் முயற்சி செய்து ரூ. 1. 65 லட்சம் நிதி திரட்டி அதனை பள்ளியில் நேற்று நடந்த விழா ஒன்றில் தலைமை ஆசிரியர் திலகரிடம் வழங்கினர். பள்ளி கணினி ஆசிரியர் ராஜப்பா ஒருங்கிணைத்தார்.

The post மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.65லட்சம் நிதி உதவி முன்னாள் மாணவர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: