மன்னார்குடியில் 23ம்தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

மன்னார்குடி, ஆக. 20: மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மன்னார்குடி செயற்பொறியாளர் மணிமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மன்னார்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் புதன்கிழமை (23ம்தேதி) காலை 11 மணியளவில் திருவாரூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் தலைமையில் மன்னார்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், மன்னார்குடி நகர், புறநகர், பேரையூர், நீடாமங்கலம், கோவில் வெண்ணி, எட மேலையூர், வடுவூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி நகர், புறநகர், திருத்துறைப்பூண்டி பள்ளம் கோயில், கோட்டூர், முத்துப்பேட்டை பகுதிக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு செயற்பொறியாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

The post மன்னார்குடியில் 23ம்தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: