×

மனநலம் பாதித்த மகளை கொன்று ஊராட்சி செயலர் தற்கொலைபோலீசார் விசாரணைகே.வி.குப்பம் அருகே சோகம்

கே.வி.குப்பம், ஏப்.20: கே.வி.குப்பம் அருகே மனநலம் பாதித்த மகளை கழுத்து இறுக்கி கொலை செய்துவிட்டு ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெருமாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாபு (48), காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர் மாச்சனூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு காட்பாடி தனியார் கல்லூரில் படிக்கும் லோஷினி(18) என்ற மகளும், மனநலம் பாதிக்கப்பட்ட தனுஷா(16) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், தனுஷா பிறவிலேயே மனம் நலம் பாதிக்கப்பட்டதால் பல ஆண்டுகளாக அவரை பல்வேறு இடங்களில் சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்துள்ளார். ஆனால் இதுவரை குணமாகவில்லையாம். இதனால் விரக்தியில் இருந்த பாபு அடிக்கடி இதுகுறித்து தனது குடும்பத்தினருடன் பேசி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாபு வழக்கம் போல் பிடிஓ அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்று வந்துள்ளார். பின்னர், மாலை வீட்டிற்கு வந்த பாபு, இளைய மகள் தனுஷாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், மொட்டை மாடிக்கு சென்ற பாபு அங்குள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அவரது மூத்த மகள் லோஷினி கதறி அழுதபடி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரின் உடல்களையும் மீட்டு கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதித்த மகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மனநலம் பாதித்த மகளை கொன்று ஊராட்சி செயலர் தற்கொலை
போலீசார் விசாரணை
கே.வி.குப்பம் அருகே சோகம்
appeared first on Dinakaran.

Tags : KV ,Kuppam ,Panchayat ,KV Kuppam ,Panchayat Secretary ,Dinakaran ,
× RELATED திருவிழா கூட்ட நெரிசலில் பெண் மீது...