மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்

தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2022-2023 ஆண்டுக்கான 57வது பொது பேரவை கூட்டம், தர்மபுரி குண்டலப்பட்டியில் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., தர்மபுரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநருமான சந்தானம், கிருஷ்ணகிரி மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் 2022-2023ம் ஆண்டுக்கான வங்கியின் நிகர லாபம் ₹15 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஓசூர் சரக துணைப் பதிவாளர் முரளி கண்ணன், தர்மபுரி சரக துணை பதிவாளர் அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மணிகண்டன், கிருஷ்ணகிரி சரக துணைப்பதிவாளர் செல்வம், தர்மபுரி பால்வளம் துணைப் பதிவுப்பாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட வங்கி இயக்குனர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், வங்கியுடன் இணைக்கப்பட்ட உறுப்பினர் சங்கங்களின் தலைவர் மற்றும் செயலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். வங்கி பொது மேலாளர் ரவி நன்றி கூறினார். வங்கி உதவி மேலாளர் ஜெய்சங்கர் தொகுத்து வழங்கினார்.

The post மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: