திருமலைதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த மாதம் 25ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்தாண்டு முதல் முறையாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன்படி, 10வது நாளாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் மூடப்பட்டது. கடந்த 10 நாட்களாக சொர்க்கவாசல் வழியாக 4 லட்சத்து 25 ஆயிரத்து 596 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.29.06 கோடியை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று அதிகாலை முதல் வழக்கம்போல் விஐபி தரிசனம், ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் சொர்க்கவாசல் 4.25 லட்சம் பேர் தரிசனம்
