மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 430 மாடுபிடி வீரர்களும், 788 காளைகளும் களம் காண இருக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்தன.
தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலாவதாக அவிழ்த்து விடப்பட்ட கோயில் காளை
