நெல்லை, ஏப்.10:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே 5ம்தேதி மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி கால்நாட்டும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா அடிக்கல் நாட்டில் சிறப்புரையாற்றினார். இதில் பொது செயலாளர் கோவிந்தராஜீலு, பொருளாளர் சதுக்கத், மாநில மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மதுரை மண்டலத் தலைவர் செல்லமுத்து, மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாஸ், கன்னியாகுமரி மண்டலத் தலைவரும் தென்காசி மாவட்டதலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா, மாநில, தென்காசி மாவட்ட செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் பங்கேற்றனர்.
The post மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு appeared first on Dinakaran.