×

மதுரவாசல் கிராமத்தில் 2 வருடமாக மூடி கிடக்கும் நூலகம்: திறக்க கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை: மதுரவாசல் கிராமத்தில் 2 வருடமாக மூடியே கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் மதுரவாசல் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நாளிதழ் படிப்பது, புத்தகம் வாசிப்பது, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு திறனை வளர்த்துக்கொள்ள கடந்த 13 வருடங்களுக்கு முன்பு நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பலர் பயன்படுத்தி வந்தனர். இதில் ஒரு நூலகரும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 வருடமாக இந்த நூலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகத்தில் உள்ள புத்தகம் வீணாகி கரையானுக்கு இரையாகிறது. மேலும் இங்குள்ள நாற்காலிகள் உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றிய நூலகருக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவது கிடையாது, அதுவும் மிகவும் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் அவரும் வேலையில் இருந்து நின்று விட்டார் என கூறப்படுகிறது. மேலும் நூலகத்தை சுற்றி புதர்கள் மண்டிக் காணப்படுகிறது. அதை சுத்தம் செய்து நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மதுரவாசல் கிராமத்தில் 2 வருடமாக மூடி கிடக்கும் நூலகம்: திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Maduravasal ,Oothukottai ,Ellapuram ,Periyapalayam ,village library ,
× RELATED சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான நிழற்குடை: புதிதாக கட்ட கோரிக்கை