×

கள்ளச்சந்தையில் மது விற்ற டிக்டாக் இளம்பெண் கைது

பொன்னேரி, அக்.4: பொன்னேரி அருகே, கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த டிக்டாக் பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கோளூர் கிராமத்தில் வசிப்பவர் தென்றல் சாந்தி. 27 வயதாகும் தென்றல் சாந்தி பிரபல டிக்டாக் சமூக வலைத்தள நடிகையாக வலம் வந்தவர் ஆவார். இந்தநிலையில், காந்தி ஜெயந்தியான நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. எனவே கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் எஸ்பி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்கப்படுவதாக பொன்னேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கள்ளச் சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட, டிக்டாக் பிரபலம் தென்றல் சாந்தியை பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பெண் ஆய்வாளர் ராஜாமணி, உதவி ஆய்வாளர், 2 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பெண் காவலர்கள் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சந்தையில் மது விற்ற டிக்டாக் இளம்பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Tik Tok ,Ponneri ,TikTok ,Thenar Shanti ,Kollur ,Tiruvallur district ,
× RELATED பிரக்யாவின் ஆபாச வீடியோ காட்சி லீக்?: இணையதளத்தில் அதிர்ச்சி