கோவை, ஆக. 7: கோவையில் மதக்கலவரம் தூண்டும் வகையில் பேஸ்புக் பதிவு வெளியிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதில் சர்ச்சைக்குரிய கருத்துகள், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முகமது அலி ஜின்னா என்பவரின் பேஸ்புக் பதிவை போலீசார் ஆய்வு செய்தபோது, அவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இரு மதத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்திருந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் முகமது அலி ஜின்னா மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post மதக்கலவரம் தூண்டும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது வழக்கு appeared first on Dinakaran.