விருதுநகர், ஜூலை 29: விருதுநகர் பாண்டியன் நகரில் இந்திய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி(இந்தியா) சார்பில் காங். வட்டார தலைவர் சரவணன் தலைமையில் வட்டார செயலாளர் எட்வர்ட் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மணிப்பூர் மாநில பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் ஆளும் மணிப்பூர் மாநில மற்றும் மத்திய பாஜக பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். காங்.,முன்னாள் நகர்மன்ற தலைவர் பாலகிருஷ்ணசாமி, ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினர்.காங்., மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட காங் கமிட்டி உறுப்பினர் சிவகுருநாதன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.