திருப்புவனம், பிப். 21: சென்னையில் ‘உலகளாவிய கல்வி’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய அளவில் சிறந்து பணிபுரியும் ஆசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று உரையாற்றினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களின் திறமை, கற்றல் உட்பட பல்வேறு திறனை ஆய்வு செய்யப்பட்டு சிறந்த ஆசிரியர்கள் விருது வழங்கப்பட்டது.
இதில், திருப்புவனம் அருகே மணலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக உள்ள முருகேசனுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற ஆசிரியரை, மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் வாழ்த்தினர்.
The post மணலூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் விருது appeared first on Dinakaran.