மணமேல்குடியில் திய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் கூட்டம்

அறந்தாங்கி, செப். 1: மணமேல்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. துக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் புதியபாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வலர்களுக்கு கூட்டம் வட்டார வள மையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். தொடர்ந்து, புதிய பாரத திட்டத்திற்கான தன்னார்வலர் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தில் இருந்து கற்போர் விவரங்களை சேகரித்து மையங்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. ணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 மையங்கள் புதிய பாரத திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை 600 கற்போர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு, கற்போருக்கு வாசிக்க, எழுத கற்றுக் கொடுக்க வேண்டும். தன்னுடைய கையெழுத்தை போடுவதற்கும் , தன்னுடைய ஊர் பெயர் ,குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர்கள், சிறு, சிறு வார்த்தைகளை எழுத வைத்தல் போன்றவற்றை பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் 30 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், வேல்சாமி மற்றும் அங்கையற்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மணமேல்குடியில் திய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: