மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.40 லட்சம் நலஉதவி

 

புதுக்கோட்டை, ஆக.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1.40 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா பயனாளிகளுக்கு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் முறையில் பிரெய்லி எழுத்துக்களில் படிப்பதற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பிரெய்லி ரீடர் கருவியினை 4 நபர்களுக்கு தலா ரூ.35,000 வீதம் ரூ.1.40 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி வைகை-குண்டாறு) ரம்யாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.40 லட்சம் நலஉதவி appeared first on Dinakaran.

Related Stories: