இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதம் அடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து ஆட்டமிழந்து கெடுத்த அக்சர், இஷாந்த், சிராஜ் ஆகியோரை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ‘ஜாலி’யாக த்ரீ இடியட்ஸ் என்று கிண்டல் செய்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். தடுமாறிக் கொண்டிருந்த அணியை ரிஷப் சதமடித்து நிமிர வைத்து வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த வாஷிங்டன் - அக்சர் படேல் பொறுப்புடன் விளையாடி கவுரமான ஸ்கோரை எட்ட வைத்தனர். அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் கட்டாயம் சதமடிப்பார், அக்சர் படேல் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாஷிங்டன் 96 ரன்னில் இருந்தபோது அக்சர் தேவையில்லாமல் ஓடி 47 ரன்னில் ரன் அவுட்டானார். இஷாந்த், சிராஜ் கை கொடுத்தால் வாஷிங்டன் சதமடித்து விடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அடுத்து வந்த இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட்டாக, வாஷிங்டன் சதமடிக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனது. வெறும் 5 பந்துகளில் 3 விக்கெட் காலியாக முதல் இன்னிங்சும் முடிவுக்கு வந்தது.
வாஷிங்டனை சதம் அடிக்க விடாத இந்திய அணியின் ‘த்ரீ இடியட்ஸ்’: வாசிம் ஜாபர் ‘ஜாலி’ கமென்ட்
