வேலூர், பிப்.19: வேலூரில் தனியார் பஸ் தாறுமாறாக ஓடி கார், ஆட்டோ, பைக் மீது அடுத்தடுத்து மோதிய சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியில் இருந்து பாகாயம் வரை இயக்கப்படும் தனியார் பஸ் நேற்று முன்தினம் இரவு வேலூர் மக்கான் பகுதி வேலூர் வடக்கு காவல் நிலையம் எதிரே செல்லும் போது தாறுமாறாக ஓடி சாலையோரம் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதியது. இதில் பெண்கள், குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். மேலும், சாலையோரம் இருந்தவர்கள், நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் மோதி 3 கார், ஒரு ஆட்டோ, 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தனியார் பஸ்சை ஊசூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன்(34) மது போதையில் பஸ்சை தாறுமாறாக இயக்கியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து ரவிசந்திரனை நேற்று கைது செய்தனர். மேலும் அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
The post போதையில் தாறுமாறாக பஸ்சை ஓட்டிய டிரைவர் கைது வேலூரில் appeared first on Dinakaran.