ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடையை மீறி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்தும், மீறி ஒட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.ஊட்டி நகரில் தடையை மீறி சுவற்றில் அரசியல் போஸ்டர்கள்- கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
