போடி, ஏப்.15: போடி அருகே தேனி தேசிய நெடுஞ்சாலையில் பழமையான பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் விருபாச்சி ஆறுமுக நயினார் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் சித்திரை முதல் நாளில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது,
இதையொட்டி நேற்று தமிழகம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர். தீர்த்தத் தொட்டியில் நீராடி நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை தரிசித்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இந்தத் திருவிழாவையொட்டி சிறப்புக் கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
The post போடி அருகே தீர்த்தத் தொட்டி கோயிலில் சித்திரை திருநாள் வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.