×

போக்குவரத்து விதிகளை மீறிய 23 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, ஏப். 13: உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையிலும், லைசன்ஸ் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

The post போக்குவரத்து விதிகளை மீறிய 23 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Manivannan ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை