போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் கூடுதல் போலீசார் சேர்ப்பு போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாநகர கமிஷனர் நடவடிக்கை

திருச்சி: திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க கூடுதல் போலீசார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையின் கீழ் ஒரு உதவி கமிஷனர் மேற்பார்வையில் கண்டோன்மென்ட், அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர் மற்றும் ரங்கம் ஆகிய ஆறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த ஆறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகளின் கீழ் மொத்தம் 279 போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் ேபாலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள்-3 பேர், எஸ்ஐ-2, எஸ்எஸ்ஐ-125, தலைமை காவலர்-101, கிரேடு-1 போலீசார்-36, கிரேடு-2 போலீசார் 12 பேரி என மொத்தம் 279 பேர் பணியாற்றி வருகின்றனர்.

The post போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் கூடுதல் போலீசார் சேர்ப்பு போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாநகர கமிஷனர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: