×

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு நல்லூரில் புதிய டிரான்ஸ்பார்மர்

 

பொன்னமராவதி, மே 22: பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு நல்லூரில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார். பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு நல்லூரில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கும் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வார்ப்பட்டு ஊராட்சி தலைவர் அழகுமல் மலைச்சாமி தலைமை வகித்தார். தாசில்தார் பிரகாஷ், ஒன்றியக்குழு தலைவர் சுதாஅடைக்கலமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய டிரான்ஸ்பார்மரை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருமயம் செயற்பொறியாளர் ஆனந்தாயி, பொன்னமராவதி உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி, திமுக நகர செயலாளர் அழகப்பன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் காளிதாஸ், சிக்கந்தர், முன்னாள் நகர செயலாளர் ராமன், இளைஞரணி இளையராஜா, துணை அமைப்பாளர் சாமிநாதன், விஏஒ விஜயா, ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதேபோல காரையூர், சித்தூர் ஆகிய ஊர்களிலும் புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்து துவக்கி வைத்தார்.

The post பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு நல்லூரில் புதிய டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.

Tags : Nallur ,Ponnamaravati ,Minister ,Raghupathi ,Ponnamaravati… ,Dinakaran ,
× RELATED திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற...