பொன்னமராவதி அருகே மேலக்களத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சி மேலக்களம் கிராமத்தில் தொற்றா நோய்களான சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரைநோய், ரத்த அழுத்த நோய் மற்றும் கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்திற்குள் கர்ப்பத்தை பதிவு செய்தலின் வழியாக பிறப்புச்சான்று பெறுதல் தொற்றும்- தொற்றா நோய்களுக்காக மாத்திரை வாங்குவோர் இடைநிற்காமல் தொடர்ந்து வாங்கி உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் முன் தடுப்பு முறைகள் அருகிலுள்ள மருத்துவமனைகள் பெற வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நல்ல தண்ணீரை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்தல் தொட்டியை வார வாரம் சுத்தம் செய்தல் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் உத்தமன் விளக்கமளித்தார். இதில் சுகாதாரஆய்வாளர் பிரேம்குமார், மகாத்மாகாந்தி தேசியஊரக வேலைஉறுதி திட்டப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல மேலைச்சிவபுரியிலும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

The post பொன்னமராவதி அருகே மேலக்களத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: