திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாட்களில் உண்டியல் காணிக்கை ரூ.70 லட்சம் வசூலாகியுள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.
இந்நிலையில், கடந்த 11 நாட்களில் வசூலாக உண்டியல் பணம் எண்ணும் பணி மலைக்கோயில் வசந்த மண்டபத்தில் கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.70 லட்சத்து 35 ஆயிரத்து 231 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் 243 கிராம் தங்கம் மற்றும் 5,420 கிராம் வெள்ளி காணிக்கை செலுத்தியிருந்தனர்.திருத்தணி முருகன் கோயிலில் 11 நாளில் ரூ.70 லட்சம் வசூல்
