×

பெருவெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்: வடியாமல் தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் தொற்று நோய்கள்..மக்கள் அவதி..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிந்து மாகாணத்தில் வெள்ளம் வடியாததால் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழை அந்நாட்டின் 3ல் ஒரு பகுதி மாகாணங்களை புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக சிந்து மாகாணம் கடும் சேதங்களை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மண் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் நதிக்கரைகளில் ஏராளமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளார்கள். பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியாததால் குழந்தைகள் தொற்று நோய்கள் மற்றும் சரும நோய்களுக்கு இலக்காகி வருகிறார்கள். கொசுக்கள் அதிகளவில் பெருக்கெடுத்து இருப்பதால் மலேரியா நோய் பரவ தொடங்கியிருப்பதாக அப்பகுதி மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். வாரக்கணக்கில் தேங்கி நிற்கும் மழைநீர் எதிரொலியாக பல்வேறு நோய்கள் பரவி வருவதால் பாகிஸ்தான் அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தற்போதும் சிந்து மாகாணத்தின் ஜோகி பகுதியில் மார்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அரசின் நிவாரண உதவிகள் எட்டவில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் பாகிஸ்தான் அரசு ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். …

The post பெருவெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்: வடியாமல் தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் தொற்று நோய்கள்..மக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,ISLAMABAD ,Sindh province ,Dinakaran ,
× RELATED பண மோசடி, வெறுப்பு பேச்சு வழக்கு;...