பெரம்பலூரில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர்,ஆக.23: பெரம்பலூர் மாவட்டவிவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25ம்தேதி அன்று நடைபெறவுள்ளது. என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 25ஆம்தேதி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மைக் கடனுதவி கள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: