பூந்தமல்லியில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

 

பூந்தமல்லி: பூந்தமல்லியில், அப்துல் கலாம் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் எட்டாவது நினைவு நாளையொட்டி பூந்தமல்லியில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அப்துல் கலாமின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில், அப்துல் கலாமின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்ட பிரதிநிதி லயன் ஜெ.சுதாகர் ஏற்பட்டில் ஏழை எளிய மக்கள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான திமுக நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

The post பூந்தமல்லியில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: