×

புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம், பேரூர் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

செங்கம், ஜூன் 25: புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் கலசபாக்கம் எம்எல்ஏவுமான பெ.சு.தி சரவணன் தலைமை தாங்கினார். தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செந்தமிழ்செல்வன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான பொன்னி சுந்தரபாண்டியன், பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், நகரச் செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவரும் போளூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான டாக்டர் எ.வ.வே கம்பன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், மூத்த முன்னோடிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், ளும், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம், பேரூர் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudupalayam West Union ,Perur DMK ,Working ,Committee ,Chengam ,DMK Election Working Committee ,Kalasapakkam ,MLA ,P.S.T. Saravanan ,Perur ,DMK ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...