பீகாரில் 125 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 5 பேர் சடலமாக மீட்பு.. ஏராளமானோர் மாயம்..தேடும் பணி தீவிரம்

பாட்னா:  பீகார் மாநிலத்தில் சுமார் 125 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்ததையடுத்து, அதில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் நாவ்காச்சியா எனும் பகுதியில் உள்ள கங்கை  நதியில் 125 பேர் கொண்ட படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மிதந்து வருகின்றனர். இதில், சிலர் மீட்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சுமார் 40 பயணிகள் செல்ல வேண்டிய படகு ஒன்றில், இரண்டு மடங்கு எடையுடன், சுமார் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதால் படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையின் மீட்புக்குழுவினர், மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மதிய நிலவரப்படி 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த பலரது நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories: