புதுக்கோட்டை மீமிசல் பாலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே மீமிசல் பாலத்தில் கழிவு நீரை செப்டிக் டேங்க் கிளீன் பண்ணும் வாகனம் மூலம் ஆற்றில் கலக்க விடுவதால் ெதாற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. ஆகையால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மீமிசல் பகுதியில் வாகனம் மூலம் கழிவு நீர் சுத்தம் செய்யும் வாகனங்கள். கழிவுகளை மீமிசலில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் கழிவு நீரை பைப்பு மூலம் விடுகின்றனர்.பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த பாலம் உள்ளது. இந்த கழிவு நீரை பாலத்தின் கீழ் விடுவதால் கழிவுநீர் மீமிசலில் ஒட்டியுள்ள கடலில் கலக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி கடலில் இந்த கழிவு நீர் கலந்தால் மீன்கள் செத்து மடிய அதிக வாய்ப்பு உள்ளது.

The post புதுக்கோட்டை மீமிசல் பாலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: