புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொலைநோக்கியில் சூரியன் நிலவு பார்க்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை, ஆக. 24: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் மாடியில் இருந்து, தொலைநோக்கி மூலம் சூரியனையும், நிலவையும் பார்க்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாணவ மாணவிகள் பார்த்து ரசித்தனர். சந்திரயான் 3 லேண்டர் நிலவில் நேற்று மாலை இறங்கியது. சந்திரனில் தென் துருவத்தில் முதல் முறையாக சந்திராயன்-3 கால்பதித்தது. உலக அளவில் இது முதல் முறையாகும். இதனையடுத்து அறிவியல் பார்வையை ஏற்படுத்தும் வகையில், தொலைநோக்கி மூலம் சூரியன், சந்திரனைக் காணும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் பலரும் தொலைநோக்கி வழியே மாலை வரை சூரியனையும், அதன்பிறகு சந்திரனையும் பார்த்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அ. மணவாளன், மாவட்டத் தலைவர் எம். வீரமுத்து, செயலர் முத்துக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்று விளக்கமளித்தனர். முன்னதாக சந்திரனில் லேண்டர் இறங்கும் நேரலைக் காட்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளே பெரிய திரையில் காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொலைநோக்கியில் சூரியன் நிலவு பார்க்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: