×

புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யகோரி 4வது நாளாக வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூலை5: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகப்பட்டினம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 4வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு இணை செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் பாண்டியன், ராமச்சந்திரன், சிங்காரவேல், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக் குழு உறுப்பினர்கள் தினேஷ்குமார், அம்பேத்கர், சதீஷ்பிரபு, சுவாதிமுத்து ஆகியோர் பேசினார். ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய கோரி நேற்று (4ம் தேதி) 4வது நாளாக வழக்கறிஞர்கள் தங்களது பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பப்ளிக் ஆபீஸ் சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

The post புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யகோரி 4வது நாளாக வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Lawyers Association ,Nagapattinam ,Nagapattinam Bar Association ,Union Government ,Joint Secretary ,Sudhakar ,Pandian ,Advocates Association ,Dinakaran ,
× RELATED கணக்கெடுப்பில் விடுபட்ட...