புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

மண்டபம், ஜூன் 7: மண்டபம் கிளை எஸ்ஆர்எம்யூ ஆலோசனை கூட்டம் நடந்தது. கிளை தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மதுரை கோட்ட துணை தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். இதில் மதுரை கோட்ட செயலாளர் ரபீக் பேசியதாவது: தற்போது அமலில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரயில்வே தனியார்மயமாக்க முயற்சிக்கும் முடிவை ரயில்வே அமைச்சகம் முற்றிலும் கைவிட வேண்டும். பெண் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

வட மாநில ஊழியர்களை அவர்கள் விரும்பும் மாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். ரயில்வே கேட் கீப்பர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து மீண்டும் துவங்கும் வரை பெண் ஊழியர்களை பணியிட மாறுதல் செய்யக்கூடாது. மண்டபத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் ரயில்வே மருத்துவமனையை ராமேஸ்வரத்திற்கு இட மாற்றம் செய்யும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும். ரயில்வே குடியிருப்புகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: