புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை

 

வேலாயுதம்பாளையம், ஏப். 7: புகழூர் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறை குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. தவிட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலைய நீர் உறிஞ்சும் கிணற்றை நகராட்சி ஆணையாளர், நகராட்சி பொறியாளர் மற்றும் குடிநீர் பணியாளர்களால் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது நீர் உறிஞ்சும் கிணற்றில் நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் காவிரிஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நீர் உறிஞ்சி கிணற்றில் நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் மேற்படி கிணறு முதல் தவிட்டுப்பாளையம் (30HP) கிணற்றையும் இணைத்து புதியதாக சுமார் 600 மீட்டர் கேபிள் மற்றும் 20HP நீர் முழ்கி மோட்டார் பொறுத்தி ஏற்கனவே உள்ள நீர்வழி பாதையை ஆழப்படுத்தி குடிநீர் பற்றாக்குறை ஏற்படாவண்ணம் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து வார்டு பகுதிகளுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது கடும் கோடை என்பதால் பொதுமக்கள் குடிநீரை தேவையான அளவுக்கு பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் குடிநீர் வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

The post புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை appeared first on Dinakaran.

Related Stories: