திருவள்ளூர்: திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பஞ்செட்டி கிராமத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவானது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் அங்கு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய பொங்கல் பானையில் ஸ்டாலின், நிர்வாகிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் திமுக-வினர் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடுவதோடு பொங்கல் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர். இதேபோல் காடையாம்பட்டி அடுத்துள்ள பண்ணப்பட்டி ஊராட்சி மாரகவுண்டன்புதூர் கிராமத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடின. இதில், மூத்தோர்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனது.
இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் பிரமுகர் சஞ்சாய்காந்தி செய்திருந்தார். விழாவில் காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், செங்கரும்பு வழங்கப்பட்டது. 350 மூத்தோர்களுக்கு பொங்கல், கரும்புடன் நூறு ரூபாய் வழங்கப்பட்டது.