×

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா

பட்டுக்கோட்டை, டிச. 23: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2022-2023ம் ஆண்டு ஊக்கத்தொகை வழங்கும் விழா பட்டுக்கோட்டை காசாங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தஞ்சாவூர் பால்வளம் துணைப் பதிவாளர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை கலந்து கொண்டு பட்டுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் பட்டுக்கோட்டை நகராட்சித்தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், திட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் காத்தவராயன், வெண்டாகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயலெட்சுமி புருஷோத்தமன், நகராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி உலகநாதன், தஞ்சாவூர் ஆவின் செயல் அலுவலர் சிந்துஜா, பட்டுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாட்சியர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

The post பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Milk ,Producers Cooperative ,Society ,Pattukottai ,Thanjavur District ,Milk Producers Cooperative Society ,Ceremony ,Dinakaran ,
× RELATED ரூ.1.35 கோடிக்கு கொப்பரை ஏலம்