×

பாலக்காட்டில் மாவட்ட டிஎம்பி ஆலோசனை கூட்டம்

பாலக்காடு, நவ.17: டிஎம்பி பாலக்காடு மாவட்ட கூட்டம் பாலக்காட்டில் கலையரங்கில் நடைபெற்றது. கட்சி மாநில தலைவர் வைக்கம் வினோத் தலைமையில் நடந்தது. பாலக்காடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை பொதுச்செயலாளர் வி.பி.சந்தோஷ் துவங்கி வைத்து பேசினார்.

அப்போது பாலக்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் ஷலிம், உன்னிகிருஷ்ணன், பிஜூ, சுசீலன், ஆறுச்சாமி கூட்டத்தில் பங்கேற்று பேசினர். முடிவில் விபிண்குமார் நன்றி கூறினார்.

The post பாலக்காட்டில் மாவட்ட டிஎம்பி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : District TMP Advisory Meeting ,Palakkad ,TMP Palakkad ,Kalayaranga ,Vaikam Vinod ,General Secretary ,VP ,Santhosh ,Palakkad District Administrators' Consultative Meeting ,Palakkad Assembly Constituency ,Palakkad District TMP Advisory Meeting ,Dinakaran ,
× RELATED நெல்லியாம்பதி மலைப்பாதையில்...