தாஜ்மகாலை சுற்றியுள்ள மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகள் மூடப்படும் : உ.பி அரசு உறுதி

லக்னோ: உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை உத்தரப்பிரதேச மாநில அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்றப்படும் என உறுதி கூறப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மகாலை காண வரும் சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த தைட விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால் காற்று மற்றும் சத்தத்தினால் ஏற்படும் மாசின் அளவை குறைக்க முடியும் என கூறியுள்ளது. மேலும் தாஜ்மகாலை சுற்றியுள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும், அதற்கு பதில் அந்த இடங்களில் சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: