பார்வை குன்றியோருக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வகுப்பு

திருச்சி, அக்.19: திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிபிரிவு மற்றும் பார்வை குன்றியவர்களுக்காக சிறப்பான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பார்வை குன்றியவர்களுக்காக மாவட்ட மைய நுாலகம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் ரோட்டாி பீனீக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி -iv (டி,என்.பி,எஸ்,சி குரூப் -iv) போட்டி தேர்விற்கான பயிற்சி வகுப்பு வரும் 22ம்தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. தேர்விற்கு தயார் செய்யும் பார்வை குன்றியவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post பார்வை குன்றியோருக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: