பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் புதூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தகவல்

விளாத்திகுளம், அக். 27: புதூர் வட்டாரத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருது விரைவில் வழங்கப்பட உள்ளது, இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் நஸிமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் அதனை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண் வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ₹15 ஆயிரம் மற்றும் சான்றிதழும், 2வது பரிசாக ₹10 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த விருதினை பெற தகுதி உள்ள புதூர் வட்டார விவசாயிகள் புதூரில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

The post பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் புதூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: